கிள்ளியூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மத்திகோடு மற்றும் மிடாலம் ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரை நேற்று நடைபெற்றது. கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சியில், ஒன்றிய அவை தலைவர் பாலூர் தேவா, தகவல் தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளர் அபிலாஷ் மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்டனர். அரசின் சாதனைகள் குறித்த கைப் பிரதிகள் வழங்கப்பட்டன.














