கிள்ளியூர்: மாற்றுத்திறனானிகள் தேர்தல் விழிப்புணர்வு

0
29


கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் 3 சக்கர விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளர்கள் ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’, ‘ஜனநாயக கடமையாற்றுவோம்’, ‘அனைவரும் வாக்களிப்போம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here