கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா இன்று கருங்கல் அருகே பாலூர் ரவுண்டானாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் தலைமை வகித்தார்.
கிள்ளியூர் பேரூர் செயலாளர் சத்யராஜ், ஒன்றிய அவை தலைவர் பாலூர் தேவா, ஒன்றிய பெருளாளர் தங்கதுரை, வேலாயுதம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனுலால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பைஜு, ஜெனோ, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.