தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: – தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி சிவா சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேடை கிடைத்தது விட்டது மைக் கிடைத்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நீங்கள் நினைத்து கர்மவீரர் காமராஜரை பற்றி பேசி இருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க செயல். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள் காமராஜர் குறித்து பேசக் கூடாது என கூறியுள்ளார்.