கீழ்குளம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கைகள், போர்வைகள், தலையணை உறைகள் தூய்மை இல்லாமல் காணப்பட்டது. அங்கு தூய்மை பணியாளர் யாரும் இல்லை.
இதனை அடுத்து ராஜேஷ்குமார் எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து ஒரு சலவை இயந்திரம் வழங்க முடிவு செய்து,நேற்று (21-ம் தேதி) வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கீழ் குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், திமுக ஒன்றிய செயலாளர் கோபால், வட்டார மருத்துவ அலுவலர் ஸ்டாலின் ஜோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














