தக்கலை அருகே காட்டாத்துறையில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். நேற்று (ஜூலை 13) இந்த கடையை மாவட்ட கலெக்டர் அழகுமீனா திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடையில் அரிசி பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் இருப்பை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு கைரேகை பதிவு செய்து பொருட்கள் கொடுக்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டார். மேலும் பதிவேடுகள் அடிப்படையில் பொருட்கள் இருப்பதையும் ஆய்வு செய்தார்.