புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த கரோலின் ஆஸ்மி (30) தனது 8 மாத ஆண் குழந்தையுடன் நாகர்கோவிலில் இருந்து உதயமார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, சாந்தி (50) என்ற பெண் குழந்தையின் கையில் இருந்த 6 கிராம் தங்க பிரேஸ்லெட்டை பறித்துள்ளார். பயணிகளின் உதவியுடன் சாந்தி கருங்கல் போலீசில் பிடித்து ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்தது. சாந்தியை கைது செய்த கருங்கல் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.














