பாலூர் பகுதியைச் சேர்ந்த ஆஸ்லின் (33) என்ற தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் நேற்று முன்தினம் யாரும் இல்லாதபோது, மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 20 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கருங்கல் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.