பாலப்பள்ளம் பகுதி சேர்ந்த 19 வயது பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் கருங்கல் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் மேள இசை கலைஞரான வாலிபருடன் மாணவி மாயமானது தெரிந்தது. போலீசார் கேரள மாநிலம் பூவார் பகுதியில் இருவரையும் பிடித்தனர். பின்னர் நேற்று காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது இருவரும் திருமண வயது எட்டவில்லை என்று தெரிந்தது. பின்னர் போலீசார் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.