கருங்கல், இடையன்கோட்டையில் உள்ள பெந்தேகொஸ்தே சபை மீது நேற்று முன்தினம் இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கல் வீசி ரகளையில் ஈடுபட்டார். கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அந்த சபை இருக்கும் இடம் தனக்கு சொந்தமானது எனவும், அது தொடர்பான பிரச்சனையில் கல் வீசியதாகவும் கூறினார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














