கருங்கல் அருகே எட்டணி என்ற சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதாகவும், அதனால் மீன் மார்க்கெட் அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குப் புகார் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் அதிகாரிகள் இன்று மார்க்கெட்டை அகற்ற வந்தனர். மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் அங்குக் குவிந்தனர். பொதுமக்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் மீன் மார்க்கெட் அகற்றாமல் திரும்பிச் சென்றனர்.