குமரியில் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல் மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். அரசு அனுமதி இன்றி பொதுஜன அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு எதிராக கோஷங்களுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் கருங்கல் எஸ்.ஐ. பென்சாம் அளித்த புகாரின் பேரில், பங்கு பணியாளர் பெஸ்கி உட்பட 400 பேர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.