2025-2026 ம் கல்வி ஆண்டு துவக்க நாளான இன்று கருங்கல் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார தலைவர் ராஜசேகர், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கிள்ளியூர் தொகுதி தலைவர் டிஜூ, மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














