கருங்கல்: மாயமான 12 வயது சிறுமி மீட்பு வாலிபருக்கு போக்சோ

0
208

கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயதான மாணவி அந்த பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ தினம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதார் கார்டு வாங்குவதற்காக சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. 

மாணவியின் தாயார் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மாணவியின் செல் போன் நம்பரை வைத்து விசாரித்த போது மாணவி கோயம்புத்தூர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் மாணவியுடன் ஒரு வாலிபரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் திருநெல்வேலி பகுதி சேர்ந்த சகாயராஜ் என்பதும், தற்போது நாகர்கோவில் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது. 

சகாயராஜ் மாணவியை கடத்திச் சென்றதும் தெரிந்தது. போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது சம்பந்தமாக குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here