குமரியில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மூதாட்டி சூசைமரியாள் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்குப் போராட் டம் நடத்துவதற்காக மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரிய அருள்தாஸ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என்றும், அதுவரை சூசைமரியாள் உடலை பெறக்கூடாது எனவும், மேலும் இதை கொலை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.














