தேங்காப்பட்டணம் செல்லும் அரசு பஸ் கருங்கல் பகுதியில் நேற்று வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒருவர் போதையில் பைக்கை ஓட்டி வந்து பஸ் மீது மோதினார். இதில் காயம் அடைந்த வாலிபர், ஆம்புலன்சில் ஏற மறுத்து அடம்பிடித்தார். பின்னர் அவரது தாயும் நண்பர்களும் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருங்கல் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.














