கருங்கல் அருகே கப்பியறை பகுதியைச் சேர்ந்தவர் காட்பிரே (27). இவர் சிஎஸ்ஐ ஆலயத்தில் போதகராக இருந்து வந்தார். இந்த நிலையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஆலயத்தில் ஆராதனை முடித்து மதியம் வீட்டிற்கு வந்து, குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது உள்ளே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் தக்கலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் காட்பிரே இறந்துவிட்டதாகக் கூறினர். கருங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.













