மார்க்சிஸ்ட் கட்சி ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், கேரள மாநில முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார கமிட்டி சார்பாக கருங்கல் ராஜீவ் ஜங்சனில் அஞ்சலி கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. கிழக்கு வட்டார செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எபிலைசியஸ் ஜோயல், சகாயபாபு, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சோபனராஜ், கிள்ளியூர் வட்டார முன்னாள் செயலாளர் சாந்தகுமார், ஜாண்மோசஸ்ராஜ் ஆகியோர் அஞ்சலி தெரிவித்து பேசினர். பலர் கலந்துகொண்டனர்.