கருங்கல், மிடாலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி குளியலறையில் குளிக்கும் போது, கதவு இடுக்கு வழியாக கில்பர்ட் என்ற தொழிலதிபர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். மாணவி செல்போனைப் பிடுங்கி, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கில்பர்ட்டைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று திங்கள் நகர் பேருந்து நிலையத்தில் மறைந்திருந்த கில்பர்ட்டை போலீசார் கைது செய்து, போக்சர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












