நடிகர் கார்த்தி, சர்தார் 2, தமிழ் இயக்கும் மார்ஷல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை, தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
இந்நிறுவனம், தனுஷ் நடித்த வாத்தி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர், சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. கார்த்தியின் 30-வது படமான இதை கல்யாண் சங்கர் இயக்குகிறார்.
இவர், தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற மேட், தில்லு ஸ்கொயர் ஆகிய படங்களை இயக்கியவர். இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
