Home சினிமா செய்திகள் நடிகர் பூச்சி முருகன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பூச்சி முருகன் மருத்துவமனையில் அனுமதி

0

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன். திமுக தலைமை நிலையச் செயலாளராகவும் உள்ளார். சமீபத்திய தேர்தலின்போது தமிழ்நாடு முழுக்க பயணித்து தீவிரமாகக் கட்சிப் பணியாற்றியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் இருப்பதால், ஓய்வு எடுப்பதற்காக முன்னாள் எம்.பியான ஆர்.எஸ்.பாரதி, மதுரை கவுன்சிலர் சுதன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களுடன் இவர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.நேற்று முன் தினம் பிற்​பகலில் பூச்​சி​முரு​க​னுக்கு திடீரென தலைச்​சுற்​றல் ஏற்​பட்டு மயங்கி விழுந்​தார்.

உடன் இருந்​தவர்​கள் கொடைக்​கானல் மருத்​து​வ​மனை​யில் முதலுதவி சிகிச்சை அளித்​து​விட்​டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். மருத்​துவ பரிசோதனை​யில், மூளைக்​குச் செல்​லும் ரத்​தக் குழா​யில் கசிவு ஏற்​பட்டு இருப்​பது தெரிய வந்​தது. ரத்​தக் கசிவை தடுப்​ப​தற்​கான நவீன சிகிச்சை வழங்​கப்​பட்​டது. தகவல் அறிந்த பூச்​சி​முரு​க​னின் மகன் மற்​றும் குடும்​பத்​தினர், நடிகர் சங்க நிர்​வாகி​கள் நேற்று காலை சென்​னையி​லிருந்து மதுரை வந்​தனர்.

முன்​னாள் அமைச்​சர் பி. மூர்த்​தி, முன்​னாள் எம்​எல்ஏ வேலு​சாமி, கவுன்​சிலர் ஜெய​ராமன், பகுதி செய​லா​ளர் புண்​ணி​யமூர்த்​தி, பொன்​சேது உள்​ளிட்ட உள்​ளூர் திமுக​வினரும் மருத்​து​வ​மனைக்கு சென்று அவரை பார்த்​தனர்.பின்​னர், ஏர் ஆம்​புலன்ஸ் மூலம் சென்னை அழைத்​து​வரப்​பட்ட பூச்​சி​முரு​கன், தேனாம்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்​சை அளிக்​கப்​பட்​டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version