கப்பியறை பேரூராட்சி, ஓலவிளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி ஆணைய சுகாதார மானிய திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் அமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பேரூராட்சி தலைவி அனுஷா கிளாடிஸ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.