கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாடகை மலையில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், பொன்னம்பலம் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். மரியதாஸ் (35) தப்பி ஓடினார். மரவள்ளி கிழங்கில் வெடிமருந்து நிரப்பி வனவிலங்குகளை வேட்டையாடும் முறை பின்பற்றப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பொன்னம்பலம் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய மரியதாஸை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.














