கன்னியாகுமரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான அரசியல் தேவை என்றும், அதை நிறைவேற்ற வந்தவர்கள் தோற்றுவிட்டதாகவும் கூறினார். விஜய்யின் வருகை இந்திய அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும், ஆனால் திமுகவை திருமணம் செய்துகொண்டதாக ஒரு காங்கிரஸ் மூத்த தலைவர் வருத்தத்துடன் கூறியதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.














