கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஓட்டுநருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து, அவரது டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.














