கிள்ளியூர், காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 8 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ரிஷோன் ஷைரின், சென்னையில் நடைபெற்ற லிரியன்ஸ் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான அழகுப் போட்டியில் கலந்துகொண்டு ட்ரெண்ட் செட் விருதை வென்றார். அவரது திறமையை வெளிக்கொணர பெற்றோர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இது ஒரு அங்கீகாரமாக அமைந்துள்ளது. விருது பெற்ற சிறுவனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.














