நாளை (13-ம் தேதி) பத்மநாபபுரம், களியல் செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. கடையால், அருமனை பேரூராட்சிகள் மற்றும் வெள்ளாங்கோடு, மாங்கோடு, மஞ்சாலுமூடு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அழைப்பு விடுத்துள்ளார்.











