களியக்காவிளை அருகே ஒற்றையடி பாதையில் சுமார் 40 வயதுடைய ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் நடந்து சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என்றும், அவர் இறந்து 5 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும், இறந்தவர் யார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














