தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில், களியக்காவிளையில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு தகவல் மையம் நேற்று திறக்கப்பட்டது. குழித்துறை தேவசம் கண்காணிப்பாளர் சிவகுமார் இந்த மையத்தை திறந்து வைத்தார். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, அறநிலையத்துறையினர் 4 பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். இந்த மையம் 2026 ஜனவரி 20ஆம் தேதி வரை செயல்படும்.














