குழித்துறையைச் சேர்ந்த நாகேந்திரன் நாயர் (64) என்பவரின் வீட்டில் கடந்த 3ஆம் தேதி கதவை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக, கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பாபு என்ற கல்யாணராமன் (57) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் திருட்டு நடைபெறவில்லை. இது குறித்து நாகேந்திரன் நாயர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.














