களியக்காவிளை அருகே உள்ள செம்மான்விளை பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினமான இன்று வாழ்வுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்க நிறுவனர் பிரேம்ராஜ், நித்திரவிளை ஜோஸ் தீரஜ், பண்பாட்டு சேவா அறக்கட்டளையைச் சேர்ந்த தீரஜ் ஆகியோர் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலை ஆர்வலர் பா. ஜோணி அமிர்த ஜோஸ், மாணவர்கள் அசோக், பிரதீஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.