வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்காவைக் கண்டித்து களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் மெதுகும்மல் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக் குழு உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சிதம்பர கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். வெனிசுலா அதிபர் மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்ய வேண்டும், அமெரிக்க படைகள் வெனிசுலா நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.








