
களியக்காவிளை பேரூர் பாரதீய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர கூட்டம் நேற்று இரவு படந்தாலுமூட்டில் நடைபெற்றது. சக்தி கேந்திர பொறுப்பாளர் சதீஷ் தலைமையில் மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஶ்ரீ தன்யா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், ஒன்றிய துணைத்தலைவர் திலீப் குமார், ஒன்றிய துணைத்தலைவர் பிரசன்னகுமாரி ஆகியோர் கட்சியின் வளர்ச்சி மற்றும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பது குறித்து உரையாற்றினர். ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.









