களியக்காவிளை போலீசார் நேற்று படர்ந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஜோய் (20) மற்றும் 3 பள்ளி மாணவர்கள் என்பதும், குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பைக் திருடியதும் தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து, 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
 
            

