கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கலிங்கராஜபுரத்தில் ரூ.1 கோடியே 77 லட்சத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கம் அமைக்கும் பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று துவங்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








