Home கன்னியாகுமரி செய்திகள் களியக்காவிளை: தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

களியக்காவிளை: தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

0

களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் பிரைட் ஷேக்ஸ்பியர் (47). மரம் ஏறும் தொழிலாளியான இவர் மேரி ஆஷா என்பவரின் தோட்டத்தில் தென்னை மரத்தின் மேல் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். திடீரென பிரைட் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரைட் நேற்று (5-ம் தேதி) உயிரிழந்தார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version