கடையாலுமூடு பேரூராட்சியின் 14வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரனுக்கும், தேங்காய் வியாபாரி தேவதாஸுக்கும் இடையே குடிநீர் குழாய் தோண்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த தேவதாஸ், ராஜேந்திரனை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளார். இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், கடையாலுமூடு போலீசார் தேவதாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.