இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டான் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

0
15

ஜோர்​டான் நாட்​டைச் சேர்ந்த முன்​னணி தொழில் நிறு​வனங்​கள் இந்​தி​யா​வில் முதலீடு செய்​வதற்கு முன்​வர​வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி 2 நாள் அரசு முறைப் பயண​மாக, ஜோர்​டான் நாட்​டுக்கு நேற்று முன்​தினம் சென்​றடைந்​தார். ஜோர்​டான் மன்​னர் இரண்​டாம் அப்​துல்​லா​வின் அழைப்பை ஏற்று இந்​தப் பயணத்தை அவர் மேற்​கொண்​டார்.

இதனைத் தொடர்ந்​து, இந்​தியா – ஜோர்​டான் தொழில்​முனை​வோர் கூட்​டத்​தில் நேற்று பங்​கேற்ற பிரதமர் மோடி, இந்​தி​யா​வில் முதலீடு செய்ய ஜோர்​டானின் நிறு​வனங்​களுக்கு அழைப்பு விடுத்​துள்​ளார். இதில் ஜோர்​டான் மன்​னர் இரண்​டாம் அப்​துல்​லா​வும் கலந்​து​ கொண்​டார்.

அம்​மான் நகரில் நடை​பெற்ற தொழில்​முனை​வோர் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இந்​தியா விரை​வில் உலகின் மூன்​றாவது மிகப் பெரிய பொருளா​தார நாடாக உரு​வாக போகிறது. எனவே, இந்த வளர்ச்​சி​யில் ஜோர்​டான் நிறு​வனங்​கள் இடம்​பெறு​வதற்​கான வாய்ப்​பு​களும் உரு​வாகி​யுள்​ளன.

மருத்​துவ உபகரணங்​கள்: இந்​தி​யா, ஜோர்​டான் இடையே நல்​லுறவு ஏற்​பட்டு 75 ஆண்​டு​களாகின்​றன. இந்​தியா மற்​றும் ஜோர்​டான் இடையி​லான உறவு வரலாற்று ரீதியி​லான நம்​பிக்கை மற்​றும் எதிர்​கால பொருளா​தார வாய்ப்​பு​கள் ஆகிய​வற்றை ஒன்​றிணைத்து உரு​வானது. ஜோர்​டானில் உள்ள இந்​திய நிறு​வனங்​களால் மருந்​துகள் மற்​றும் மருத்​துவ உபகரணங்​களைத் தயாரிக்க முடி​யும்.

இதன்​மூலம், ஜோர்​டான் மக்​கள் பயன்​பெறு​வார்​கள். மேலும், மேற்கு ஆசிய மற்​றும் ஆப்​பிரிக்க நாடு​களுக்கு நம்​பக​மான மைய​மாக ஜோர்​டான் உரு​வாக முடி​யும். எனவே, ஜோர்​டானிலுள்ள நிறு​வனங்​கள் இந்​தி​யா​வில் தொழில் தொடங்​கு​வதற்கு முன்​வர​வேண்​டும். அவ்​வாறு வரும் நிறு​வனங்​களுக்கு போதிய வசதி​களை இந்​தியா செய்து தரும். இந்​தி​யா​வில் செய்​யும் முதலீடு​களால் ஜோர்​டான் நிறு​வனங்​களுக்கு அதிக அளவில் வரு​வாய் வர வாய்ப்​புள்​ளது.

இந்​தி​யா​வுடன் இணை​யும்​போது ஜோர்​டான் நிறு​வனங்​கள் இந்​தியா வளர வாய்ப்பை உரு​வாக்​கு​வதோடு, தங்​களது வரு​வாயை​யும் அதிக அளவில் பெருக்​கிக் கொள்ள முடி​யும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

எத்​தி​யோப்​பியா பயணம்: ஜோர்​டான் நாட்​டில் 2 நாள் சுற்​றுப்​பயணம் நிறைவுற்​றதைத் தொடர்ந்​து, எத்​தி​யோப்​பி​யா​வுக்கு பிரதமர் மோடி புறப்​பட்​டுச் சென்​றார். அதன் பின்​னர் ஓமன் நாட்​டுக்​குச் செல்​லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்​நாட்​டில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கிறார். இதைத் தொடர்ந்​து அவர்​ இந்​தி​யா திரும்​புகிறார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here