பெரம்பூர் பின்னணியில் ‘ஜமா’ இயக்குநரின் படம்

0
22

‘ஜமா’ மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், அடுத்து இயக்கி, நடிக்கும் படத்தை நியோ கேசில் கிரியேஷன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பற்றி பாரி இளவழகன் கூறும்போது, “இதுவும் மண் சார்ந்த கதைதான்.

ஆனால் ‘ஜமா’வில் இருந்து மாறுபட்ட களமாக இருக்கும். சென்னையின் பெரம்பூர் பகுதியின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் ஜாலியான பேமிலி என்டர்டெயினராக இப்படம் இருக்கும். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here