காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை தவிர்க்கலாம்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

0
46

 உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்ட காசோலை மோசடி வழக்கு ஒன்​றில் நீதிப​தி​கள் அரவிந்த் குமார், சந்​தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

காசோலை மோசடி வழக்​கில் ஒரு​வர் நீதி​மன்​றத்​தால் தண்​டிக்​கப்​பட்ட பிறகு புகார்​தா​ரருடன் சமரசம் செய்து கொண்​டால் சிறை தண்​டனையை தவிர்க்​கலாம். இரு தரப்​பினர் இடையே சமரச ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​விட்​டால், என்ஐ சட்​டத்​தின் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் விதிக் கப்​பட்ட தண்​டனை ரத்​தாகி​விடும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

காசோலை மோசடி வழக்​கில் இரு தரப்​பினர் இடையி​லான சமரச உடன்​பாட்​டுக்கு பிறகு குற்​ற​வாளிக்கு விதிக்​கப்​பட்ட தண்​டனையை பஞ்​சாப், ஹரி​யானா உயர் நீதி​மன்​றம் ரத்​துசெய்ய மறுத்​திருந்​தது. இது தொடர்​பான உத்​தரவை உச்ச நீதி​மன்​றம் ரத்து செய்​தது.

இது தொடர்​பாக உச்ச நீதி​மன்ற அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில், “காசோலை மோசடி குற்​றம் என்​பது ஒரு சிவில் தவறு. இது சமரசம் மூலம் தீர்வு காணக்​கூடியது. வழக்​கின் எந்​தவொரு கட்​டத்​தி​லும் சம்​பந்​தப்​பட்​ட நபர்​கள்​ சமரசத்​துக்​கு வரக்​கூடியது’’ என்​று கூறி​யுள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here