‘கனவு போன்று இருக்கிறது’ – உலகக் கோப்பை தொடர் நாயகி தீப்தி சர்மா

0
18

உலகக் கோப்பை தொடரில் ஆல்​ர​வுண்​ட​ரான இந்தியாவின் தீப்தி சர்​மா, பேட்​டிங்​கில் 215 ரன்​களும் பந்​து​வீச்​சில் 22 விக்​கெட்​களை​யும் வேட்​டை​யாடி இருந்​தார். இதனால் அவர், தொடர் நாயகி​யாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

தீப்தி சர்மா கூறும்போது, ‘‘உண்​மை​யைச் சொல்ல வேண்​டும் என்​றால் இது இன்​னும் எனக்கு ஒரு கனவு போலவே தோன்​றுகிறது. உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் பங்​களிப்​ப​தில் நான் மிக​வும் மகிழ்ச்​சி​யடைகிறேன்.

சவால்​மிகுந்த ஆட்​டங்​களை எனக்​குப் பிடித்​த​மானவை. சூழ்​நிலைக்கு ஏற்ப விளை​யாட வேண்​டும் என்று நினைத்​தேன். பேட்​டிங்​கிலும், பந்​து​வீச்​சிலும் சிறப்​பாக செயல்பட முடிந்​தது. சிறந்த ஆல்​-ர​வுண்​ட​ராக வலம் வர முடிந்​தது.

தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் லாரா வோல்​வார்ட் மிகச்​சிறந்த இன்​னிங்ஸை விளை​யாடி​னார். களத்​தில் அமை​தி​யாக இருக்க முயற்​சித்​தோம். ஒரு​வருக்​கொரு​வர் உற்​சாகப்​ படுத்​திக் கொண்டே இருந்​தோம். இவ்​வாறு தீப்​தி சர்​மா கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here