அரசியல் நிகழ்ச்சிகளில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை: பழனிசாமி கருத்து

0
19

அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். தரு​மபுரி​யில் நேற்று பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு அரசு போதிய பாது​காப்பு ஏற்​படுத்​தித் தராதது​தான் காரணம்.

அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது தமிழக அரசின் கடமை. முதல்​வரின் கட்​டுப்​பாட்​டில் காவல் துறை உள்​ள​தால், கரூர் சம்​பவத்​துக்கு அவர்​தான் பொறுப்​பேற்க வேண்​டும். மக்​கள் கேள்வி​களுக்​கும் அவர்​தான் பதில் கூற வேண்​டும். தற்​போது ஒரு நபர் ஆணைய விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது.

அவர்​களின் விசா​ரணை முடிவை பொறுத்​திருந்து பார்ப்​போம். ஒரு நபர் ஆணை​யம் அமைக்​கப்​பட்ட பிறகு ஐஏஎஸ் அதி​காரி​கள், காவல் துறை உயர் அதி​காரி​கள் இந்த விவ​காரம் தொடர்​பாக பேசுவது ஏன்? கடந்த அதி​முக ஆட்​சி​யின்​போது திமுக-வுக்கு பல கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், தற்​போது திமுக அரசு எதிர்க்​கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் அரசி​யல் செய்​கிறது. ஆட்​சி, அதி​காரம் இருக்​கிறது என்று ஆடி​னால் காணா​மல் போய்​விடு​வீர்​கள்.

தமிழகத்தை தலைகுனிய விட​மாட்​டோம் என கூறும் முதல்​வர் ஸ்டா​லின், கரூர் சம்​பவத்​தின் மூலம் தேசிய அளவில் தமிழகத்​துக்கு தலைகுனிவை ஏற்​படுத்தி விட்​டார். விசிக, இடது​சாரி கட்​சிகள் மனசாட்​சியை இழந்து விட்​டனர். திருச்​சி, விழுப்​புரத்​தில் அவர்​கள் மாநாடு நடத்த அனு​மதி கேட்ட இடத்​துக்கு திமுக அரசு அனு​மதி தரவில்லை என்று அப்​போது குற்​றம்​சாட்​டினர். ஆனால், தற்​போது கரூர் சம்​பவத்​தில் அரசுக்கு ஆதர​வாக நிற்​கின்​றனர்.

டாஸ்​மாக்​கில் ரூ.10 முறை​கேடு மூலம் பல்​லா​யிரம் கோடி முறை​கேடு நடந்​துள்​ளது. மீண்​டும் அதி​முக அரசு அமைந்​தவுடன் இது தொடர்​பாக விசா​ரணை நடத்​தப்​படும். அதே​போல, திமுக ஆட்​சி​யில் முடக்​கி​வைத்​துள்ள திட்​டங்​கள் அனைத்​தும் மீண்​டும் அமல்​படுத்​தப்​படும். அதற்​கு பொது​மக்​கள் அதி​முக-வை ஆதரிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக, கூட்​டம் தொடங்​கும்​போது கரூர் சம்​பவத்​துக்கு 2 நிமிட மவுன அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது. கூட்​டத்​தில், முன்​னாள் அமைச்​சர்​கள் கே.பி.அன்​பழகன், முல்​லை​வேந்​தன் மற்​றும் அதி​முக நிர்​வாகி​கள் கலந்​து​ கொண்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here