Home உலக செய்திகள் ஹமாஸ் அமைப்புக்கு இந்தியா தடை விதிக்க வேண்டும்: இஸ்ரேல் அரசு வலியுறுத்தல்

ஹமாஸ் அமைப்புக்கு இந்தியா தடை விதிக்க வேண்டும்: இஸ்ரேல் அரசு வலியுறுத்தல்

0

ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியாவிடம் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. தீவிரவாதத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என இந்தியா கூறுகிறது. அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவாக உள்ளது. ஐ.நாவில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கவும் இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு தடை விதித்தன. ஆனால் இந்தியா தடை செய்யவில்லை. மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானின் லஷ்கர் -இ-தொய்பா அமைப்பினருக்கு இஸ்ரேல் கடந்த 2023-ம் ஆண்டு தடை விதித்தது. அதேபோல் ஹமாஸ் அமைப்புக்கும் இந்தியா தடை விதிக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான அப்போதைய இந்திய தூதர் நார் கிலான் கூறினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மாதம் நடைபெற்ற காஷ்மீர் ஒற்றுமை தினத்தில் லஷ்கர் – இ- தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்பின் தலைவர்களுடன் முதல் முறையாக ஹமாஸ் தலைவர்களும் பங்கேற்றனர். இதனால் ஹமாஸ் அமைப்புக்கு இந்தியா தடை விதிக்க இதுதான் சரியான நேரம் என இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version