இரணியல் சொக்காலத் தெருவைச் சேர்ந்தவர் உமா (47). சிங்கப்பூரில் நர்சாக வேலை பார்க்கிறார். இவரது வீட்டுச் சுவரில் இயேசு, மாதா போட்டோக்கள் சிறிய கண்ணாடிக் கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று உமாவின் சகோதரர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு வீட்டுச் சுவரில் இருந்த போட்டோக்களில் கரி எண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து சிங்கப்பூரில் உள்ள உமாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரமேஷ் பாபு இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.