இரணியல்: மீனவர் செல்போனை பறித்து சென்றவர் கைது

0
104

குளச்சல், மேல குறும்பனை பகுதியைச் சேர்ந்த மரிய டான்ஸ் (70) என்ற மீனவரிடம் இருந்து, நேற்று திங்கள் நகர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்திருந்தபோது விலை உயர்ந்த ஐபோனை ஒருவர் பறித்துச் சென்றார். அக்கம்பக்கத்தினர் திருடனை மடக்கிப் பிடித்து இரணியல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கீரிப்பாறை மணிகண்டன் (51) என்பவரே திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here