இரணியல், கண்டன்விளை பகுதியை சேர்ந்த ராஜன் (41) என்பவர், நேற்று ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து, தனியாக இருந்த 32 வயது திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் வந்ததும் கொலை மிரட்டல் விடுத்து ராஜன் தப்பிச் சென்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜனை கைது செய்தனர்.