பத்மநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சிவப்பிரகாசம் (47) தொழிலாளி. இவருடைய மனைவி கலா (45). இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மகனை பார்க்க நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். சுங்கான்கடை பகுதியில் ஒரு வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சிவப்பிரகாசம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி கலா அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.