இரணியல்:  13 வயது மகளுடன் தம்பதி மாயம்

0
228

இரணியல், மாடத்தட்டுவிளையை சேர்ந்தவர் அனீஸ் குமார் – சோனியா தம்பதியினர். இவர்களுக்கு 13 வயதில் 9-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். கடந்த மே மாதம் 16ஆம் தேதிக்குப் பின் 3 பேரும் வீட்டில் இருந்து மாயமாகினர். ஜூன் 2-ம் தேதி பள்ளி திறந்தபோதும் மாணவியை பள்ளிக்கு அனுப்பவில்லை, ஊருக்கும் வரவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் இல்லை. இதுகுறித்து சோனியாவின் தாயார் ரோஸ்மேரி இரணியில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here