Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: 30 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

இரணியல்: 30 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

0

நாகர்கோவிலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக குமரி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் இரணியல் போலீசார் சுங்கான் கடை பகுதியில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் சுமார் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேரையும் இரணியல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவர்கள் திருவனந்தபுரத்திற்கு கஞ்சாவை கடத்திக் கொண்டு செல்வதாக தெரிகிறது. இவர்களிடம் கஞ்சா கொடுத்தவர் யார்? யாருக்கு சப்ளை செய்ய கொண்டு சென்றனர் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version