அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற பாகிஸ்தான் கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்

0
23

அனு​மதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்​தான் செல்ல முயன்ற கன்​டெய்​னர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்​பி​யுள்​ளது. அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இடையி​லான போர் 3 வாரங்​களைக் கடந்து நடை​பெறுகிறது.

இதனால், ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக சரக்​குக் கப்​பல் செல்ல ஈரான் தடை விதித்​துள்​ளது. இந்​தியா உள்​ளிட்ட சில நாடு​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தால் சில கப்​பல்​களுக்கு ஈரான் அனு​மதி வழங்​கியது. இந்​நிலை​யில், அனு​மதி பெறாமல் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக பாகிஸ்​தான் செல்ல முயன்ற கன்​டெய்​னர் கப்​பலை ஈரான் திருப்பி அனுப்​பி​யுள்​ளது.

இதுகுறித்து ஈரானின் இஸ்​லாமிய புரட்​சிகர பாது​காப்​புப் படை​யின் (ஐஆர்​ஜிசி) கடற்​படைத் தளபதி அலிரேசா தாங்​சிரி கூறும்​போது, “சட்ட நெறி​முறை​களுக்கு இணங்​கத் தவறிய​தா​லும், ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகச் செல்ல அனு​மதி பெறாத​தா​லும், பாகிஸ்​தான் நோக்கி செல்ல முயன்ற செலன் என்ற கன்​டெய்​னர் கப்​பலை கடற்​படை வீரர்​கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி உள்​ளனர்.

இந்த குறுகிய நீர்​வழிப்​பாதை வழி​யாக கப்​பல்​கள் செல்​வதற்கு ஈரானின் கடல்​சார் ஆணை​யத்​தின் முழு​மை​யான ஒருங்​கிணைப்பு அவசி​யம். இது நாட்​டின் இறை​யாண்​மை​யைப் பாது​காக்​கும் நடவடிக்​கை” என்​றார். உலகளா​விய கச்சா எண்​ணெய் விநி​யோகத்​தில் 5-ல் ஒரு பங்கு செல்​லும் இந்த முக்​கிய பாதை​யில் ஈரான் தனது கட்​டுப்​பாட்​டைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

“நட்பு நாடு​களின் கப்​பல்​கள் பாது​காப்பு விதி​முறை​களுக்கு உட்​பட்டு செல்​லலாம்” என ஈரான் எச்​சரித்​துள்​ளது. அமெரிக்கா இப்​பகு​திக்கு கூடு​தல் படைகளை அனுப்பி வரும் வேளை​யில், பாகிஸ்​தான் உள்​ளிட்ட இடைத்​தரகர்​கள் மூலம் 15 அம்ச போர்​நிறுத்த திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளது. இருப்​பினும், ஈரான் பேச்​சு​வார்த்​தைக்​கான வாய்ப்​பு​களை நிராகரித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here